ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையை வரும் 31-ம் தேதி கூட்ட அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்துள்ளதாக தகவல்..!!

ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து விவாதிக்க ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையை வரும் 31-ம் தேதி கூட்ட அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையை 21 நாட்களுக்குள் கூட்ட அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா உத்தரவிட்டிருந்தார். முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி ஆகியவை பறிக்கப்பட்டன.

மேலும், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதற்காக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

இதையடுத்து, சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்ட அசோக் கெலாட், பேரவையைக் கூட்டுவதற்கு அனுமதி கேட்டு காரணம் மற்றும் தேதியுடன் கூடிய புதிய கடிதத்தை நேற்று முன்தினம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது.

மேலும்,  கொரோனா வைரஸ் பரவல் குறித்து பேரவையில் எம்எல்ஏ-க்களுடன் விவாதிக்க வேண்டும். இதற்காக வரும் 31-ம்தேதி சட்டப் பேரவையைக் கூட்டவேண்டும். வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அவையில் விவாதம் நடத்த வேண்டியது அவசியம் என்று தெரிவித்து வரும் 31-ம்தேதி சட்டப் பேரவையைக் கூட்ட முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: