செங்கல்பட்டு மதுராந்தகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக அதிகளவு முகாம்கள் அமைப்பு: அச்சத்தால் வீட்டை பூட்டி விட்டு கிராம மக்கள் ஓட்டம்...!

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அச்சப்பட்டு, பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு ஓட்டம் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸானது தற்போது சென்னையில் சற்று குறைந்துள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகளவு பரவி வருகிறது. அந்த வகையில் மதுராந்தகம் அடுத்த அச்சிறப்பாக்கத்தில் கொரோனா பரவல் கூடிக்கொண்டே செல்வதால், அனைவருக்கும் கொரோனா பரிசோதைகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஆச்சீஸ்வரர் கோவில் தெருவில் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அப்போது, அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் சோதனை செய்ய அச்சப்பட்டு தலைமறைவாகிவிட்டனர். அதிலும் சிலர் வீடுகளை பூட்டிவிட்டு வெளியில் வர மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், ஏராளமான மக்கள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்காக காத்துக்கிடக்கும்போது, அரசு சார்பில் நடைபெற்ற பரிசோதனை முகாமுக்கு யாரும் வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஒருசில இடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகளை மாற்றி கூறி விடுவதும் பொதுமக்களின் அச்சத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

Related Stories: