விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், 2019ம் ஆண்டு காரீப் பருவத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு தொகையாக ஓரியண்டல் இன்சூரன்ஸ் மூலம் முதல் தவணை ரூ.14 கோடி பெறப்பட்டு 828

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.தற்போது இரண்டாவது தவணையாக ரூ. 30 லட்சம் பெறப்பட்டு 243 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் இயற்கை இடர்பாடுகள் ஏதேனும் நிகழும்

முன்பே, நடப்பாண்டிற்கான காரீப் பருவத்திலும், அந்தந்த பயிர்களுக்கு ஏற்ற பிரீமியம் தொகையை செலுத்துவதற்கு ஜூலை 31 கடைசி நாள்.

எனவே, விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஏதேனும் ஒன்றில், உரிய ஆவணங்களுடன் பிரீமியம் தொகையை செலுத்தி,

இத்திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அந்தந்த பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கலெக்டர் மகேஸ்வரி

ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: