புதுவையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தமிழக-புதுவை எல்லை மூடல்!!!

புதுச்சேரி:  புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம்-புதுச்சேரி எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்கள் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. புதுவை மாநிலத்தில் கொரோனா பாதிப்பானது நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால், புதுச்சேரியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2787 ஆக உள்ளது.

இதில், 1645 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் உயிர்கொல்லி கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தற்போது,  தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 3494 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி அரசு தமிழக-புதுவை எல்லைகளை மூடியுள்ளன. அதாவது தமிழகத்திலிருந்து வாகனங்களில் அதிகளவு நபர்கள் வருவதால்தான், கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இதனால் அனுமதி பெறாமல் புதுச்சேரி எல்லைக்குள் வரும் வாகனங்களை சோதனை நடத்தப்பட்டு, பின்னர் திருப்பியனுப்பப்படுகின்றனர். அதாவது இ-பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய பொருட்களான பால்  உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்திலிருந்து சென்ற ஏராளமான வாகனங்கள் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இந்நிலையில், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories: