மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையால் எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: மஞ்சளாறு அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால், எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மஞ்சளாறு அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, கொடைக்கானல் மலைச்சாலையில் மஞ்சளாறு அணைக்கு மேலே எலிவால் அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால், எலிவால் அருவியில் நீர்வரத்து ஏற்படும். இங்கிருந்து வரும் தண்ணீர் மஞ்சளாறு அணைக்கு சென்று நிரம்பும்.

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் எலிவால் அருவியில் தண்ணீர் கொட்டும் அழகையும், அதே பகுதியில் உள்ள மஞ்சளாறு அணையின் எழில்மிகு தோற்றத்தையும் கண்டு ரசிப்பர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் போதிய மழை இல்லாததால் எலிவால் அருவியில் நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருதால், எலிவால் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. மஞ்சளாறு அணைநிரம்புவதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: