அரக்கோணம் ரயில் நிலையத்தில் கொரோனா நோயாளிகள்!: அழைத்து செல்ல வாகனம் வராததால் நீண்ட நேரம் காத்திருப்பு..சமூக பரவலாக மாறும் அபாயம்..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களை 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்ததால் தொற்று சமூக பரவலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றானது அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னையில் கொரோனாவின் பாதிப்பு குறைந்தாலும் கூட, மற்ற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் அரக்கோணத்தில் கொரோனாவின் தாக்கம் வேகமாகி பரவி தற்போது மாவட்டத்திலேயே சற்று கூடுதலாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

ஆனால் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையின் அலட்சிய போக்கால், பல்வேறு விபரீதங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் ஒருபகுதியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை ஒரே நேரத்தில் முகாம்களுக்கு அழைத்து செல்லும் வகையில், அனைவருமே ரயில் நிலையம் அருகே வரவழைக்கப்பட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக எந்த வாகனமும் வராததால் கொரோனா நோயாளிகள் செய்வதறியாமல் ஆங்காங்கே சுற்றி திரிந்ததுதுடன் ரயில் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்திருந்தனர். விபரீதம் அறியாமல் சகஜமாக செயல்பட்டதால் தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: