இந்திய பொருளாதார சீர்திருத்தம் முதலீடுகளை ஈர்க்க போதுமானதல்ல: மேலும் மாற்றங்கள் செய்வது அவசியம் ஐஎம்எப் வலியுறுத்தல்

வாஷிங்டன்: இந்தியாவின் தொடர் முயற்சிகளால் முதலீடுகள் வந்துள்ளன. ஆனால், தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்க இது போதுமானதல்ல. பொருளாதார சீர்த்திருத்தங்களை மேலும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என, ஐஎம்எப் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளன. பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் 2,000 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளன. இதுகுறித்து சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமை செய்தி தொடர்பாளர் கெரி ரைஸ் கூறிதாவது: கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க, வர்த்தகத்துக்கான சூழலை மேம்படுத்துவது மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது போன்ற முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வந்துள்ளது.

இதன் பலனாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. புதிய திவால் சட்டம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவையும் இதற்கு உதவியுள்ளன. மேலும் உலக வங்கியின் எளிதாக தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில் 2018ம் ஆண்டு 100வது இடத்தில் இருந்த இந்தியா, 2020ல் 63வது இடத்துக்கு முன்னேற காரணமாக அமைந்துள்ளது. ஆனால், இவை மட்டும் போதாது. தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் மேலும் பல பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நிலையான முதலீடுகளும் வளர்ச்சியும் சாத்தியமாகும். ெகாரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் பாதிப்படையும்.

படிப்படியாக பொருளாதாரம் மேம்படுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வேளாண் துறையில் உற்பத்தி திறன் மேம்பட்டாலும் கூட, பொருளாதார பாதிப்பு தொடர்ந்து நீடிக்கும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தால், நுகர்வோரின் நம்பிக்கை குறைந்து, பொருளாதார வளர்ச்சியை தாமதப்படுத்தும் என்றார்.

Related Stories: