ஒபிசி இட ஒதுக்கீட்டிற்கான கிரீமி லேயர் விதிகளை திருத்த மத்திய அரசு திட்டம் : பாஜகவிலேயே எதிர்ப்பு எழுந்ததால் பரிந்துரைகளில் தளர்வு தர முடிவு!!

டெல்லி : ஓபிசி கிரீமி லேயர் விதிகளை மாற்ற பாஜக எம்பிக்கள் இடையே கருத்து வேறுபாடு எதிரொலியாக புதிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்துள்ளது. ஓபிசி கிரீமி லேயர் பிரிவினருக்கான தகுதியை நிர்ணயிப்பதில் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை உட்படுத்தி அதை திருத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்டோருக்கு ஆண்டு வருவாய் ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் பெற்றவர்களின் ஒட்டுமொத்த வருவாயுடன் சேர்த்து கணக்கிட்டால், பல தகுதியுள்ள ஒபிசியினரை மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அரசுப் பணிகளை பெற முடியாமல் செய்துவிடும்.

எனவே இதற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலவாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 1993ன் ஆணையின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓபிசி கிரீமி லேயர் வருமான வரம்பு மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணவீக்கத்திற்கு தகுந்தாற்போல் மாற்றப்பட வேண்டும். அவ்வாறு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு இருந்தால் தற்போது குறைந்தது ரூ. 15 லட்சமாக இருந்திற்கும்.ஆனால் தற்போது ஓபிசி கிரீமி லேயர் வரம்பு ரூ. 8 லட்சமாக இருப்பதால் மிகப்பெரும்பான்மையான இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வரம்பிற்குள் வராமல் வெளியே தள்ளப்பட்டனர்.

Related Stories: