கொரோனாவுக்கு சிகிச்சை சித்த மருத்துவ மையம் அதிகரிக்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை: வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ மையத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த 25 பேர் நேற்று வீடு திரும்பினர். அவர்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் பழங்கள் மற்றும் கபசுபர குடிநீர் வழங்கி வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா தொற்று வேகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் முடிவதற்குள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும். வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ மையத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 486 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவம் நல்ல பலன் அளிப்பதால், தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ மையங்களின் எண்ணிக்ைக விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: