சமூக பரவல் இல்லை: எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் கட்டத்தை எட்டவில்லை என எய்ம்ஸ் இயக்குநர் விளக்கமளித்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா நேற்று கூறியதாவது:

இந்தியாவில் கொரோனா பாதிப்பானது சமூக பரவல் கட்டத்தை எட்டவில்லை. சில நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அந்த பகுதிகளில் உள்ளூர் சமூக பரவலாக காணப்படுகிறது. இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து கோவாக்சின் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வது தொடங்கி உள்ளது. முதல் கட்ட சோதனையில் ஆரோக்கியமான வேறு எந்த நோய் பாதிப்பும் இல்லாத 18 வயது முதல் 55 வயது வரையிலான 1125 பேர் பங்கேற்பர். இவர்களில் 375 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும். 2வது பரிசோதனைக்கு 12 முதல் 65 வயது வரையிலான 750 பேர் உட்படுத்தப்படுவார்கள்.

Related Stories: