திருச்சியில் கொரோனா முடிவுகளை அறிய இணையதளம் தொடக்கம்

திருச்சி: திருச்சியில் கொரோனா முடிவுகளை தெரிந்துகொள்ள இணையதள முகவரி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. cv19.microkapa.in என்ற இணையதளத்தில் கொரோனா முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

திருச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,265 ஆக உயர்ந்துள்ளது. 977 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 35 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 1,70,693 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,07,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 50,294 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 2,481 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 2.46% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.62%ஆக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

Related Stories: