நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் பெறலாம்: வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

மானாமதுரை: மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் எஸ்டபிள்யூ திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் ஆய்வுக்குப்பின் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் குழாய் கிணறு, துளைகிணறு, நீர்பாசனக்குழாய், நீர்தேக்க தொட்டி உள்ளிட்டவைகளுடன் இணைந்து நுண்ணீர் பாசனம் செய்ய மானியம் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் 87 விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்து பணிகள் நடந்து வருகிறது.

இதற்கு நிதியாக ரூ.37.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 52 விவசாயிகள் முன்பதிவு செய்துள்ளனர்.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என்றார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குநர் பத்மாவதி, வேளாண்மை அலுவலர் கிருத்திகா, உதவி வேளாண்மை அலுவலர் தினேஷ் உடன் இருந்தனர்.

Related Stories: