இந்திய எல்லையில் நேபாளம் தொடர்ந்து அத்துமீறல்...! பீகார் எல்லையோர கிராமங்களில் துப்பாக்கிசூட்டால் மக்கள் பீதி!!!

பீகார்:  பீகார் எல்லையில் நேபாள காவல் துறை அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தியதால் அப்பகுதில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவுடன் நட்பு பாராட்டி வந்த நேபாள அரசு கடந்த சில மாதங்களாக எதிர்ப்பை நிலைநாட்டி வருகிறது. குறிப்பாக நேபாள பிரதமர் கே.பி ஷர்மா வொலி தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கிடையில், இந்தியா-நேபாளம் எல்லையை பிரிக்கும் மாநிலங்களில் ஒன்றான பீகாரில் எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகஞ்சில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரு நாட்டு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேபாள காவல் துறையினர் அத்துமீறி இந்திய எல்லையில் உள்ள கிராமங்களில் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலில் இந்திய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும், நேபாள காவல் துறையினரின் துப்பாக்கிசூடு குறித்து கிருஷ்ணகஞ் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் 2வது முறையாக தொடர்ந்து நேபாள காவல் துறை துப்பாக்கிசூடு நடத்துவதால் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதேபோல் கடந்த மாதம் பீகார் மாநிலம் சீதாமாரி அருகே நேபாள ஆயுதப்படை அத்துமீறி தாக்கியதில் இந்திய ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: