13 ஆயிரம் கிராமங்களிலும் ஒய்எஸ்ஆர் இலவச கிளினிக் : ஜெகன்மோகன் அறிவிப்பு

திருமலை: ஆந்திரா முழுவதிலும் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க விரைவில்  ஒய்எஸ்ஆர் கிராம கிளினிக் தொடங்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்தார். ஆந்திர மாநிலம், தாடேப்பள்ளி முகாம் அலுவலகத்தில் இருந்து ஆரோக்கிய திட்டத்தின் கீழ் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்தை  6 மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெகன்மோகன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.  அப்போது, அவர் பேசுகையில், ‘‘மருத்துவ செலவுக்காக யார் ஒருவரும் கடனாளி ஆகிவிடக் கூடாது என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.

இதற்காக, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒய்எஸ்ஆர் கிராம கிளினிக் என்ற பெயரில் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஒவ்வொரு கிராம செயலகத்தின் அருகே கிராம கிளினிக் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதன்மூலம் 13 ஆயிரம் கிராம கிளினிக் அமைக்கப்படும். மேலும், ஒரு ஏஎன்எம்,  செவிலியர் உட்பட ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில், 54 விதமான மருந்துகள் வழங்கப்பட உள்ளது. இந்த கிளினிக் மூலமாக ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டி வெலுகு திட்டத்தின்கீழ் 65 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது ’’ என்றார்

Related Stories: