கொரோனாவால் பாதிக்கப்பட்ட 150 நாடுகளுக்கு இந்தியா சார்பில் உதவி: ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..!!

டெல்லி: உலகில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 150 நாடுகளுக்கு இந்தியா சார்பில் உதவி செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதில் மருத்துவம் உள்பட பல்வேறு வகையில் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது என்று ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

மேலும், கொரோனா தொற்றுநோய், பல நாடுகளின் பின்னடைவை கடுமையாக சோதித்துள்ளது. இந்தியாவில், அரசாங்கம் மற்றும் மக்கள் சமூகத்தின் முயற்சிகளை இணைப்பதன் மூலம், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சித்தோம் என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போரை இந்தியாவில் மக்கள் யுத்தமாக மாற்றி உள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐநாவின் ECOSOC அமைப்பை முதலில் தொடங்கியவர் ஒரு இந்தியர், கூடுதல் நாடுகளை ஒருங்கிணைத்துள்ளதால் ஐநா சபை மேலும் வலுவடைந்துள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்தியா ஒரு சுதந்திர தேசமாக 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு இந்தியரும் தங்கள் தலைக்கு மேல் பாதுகாப்பான கூரையை வைத்திருப்பதை நாங்கள் அறிமுகம் செய்த ‘அனைவருக்கும் வீட்டுவசதி’ திட்டம் உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, தற்போது இந்த பேரிடர் காலத்தில் நாம் எடுத்து வரும் உள்நாட்டு முயற்சிகள் மூலம் வருகின்ற 2030ம் ஆண்டு ஓர் நிலையான எதிர்கால இலக்குகளை அடைவதில் மீண்டும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறோம். மேலும் பிற வளரும் நாடுகளின் நிலையான எதிர்கால இலக்குகளை பூர்த்தி செய்வதிலும் நாங்கள் ஆதரவளிக்கிறோம் என்று இந்த ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Related Stories: