ஜூலை 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் ஏர் பிரான்ஸ் 28 விமானங்களை இயக்கவுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

டெல்லி: ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் ஏர் பிரான்ஸ் 28 விமானங்களை இயக்கவுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விமானங்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும்  பாரிஸ் இடையே இயக்கப்படுகிறது. ஜூலை 17ம் தேதி முதல் முதல் 31ம் தேதி வரை  அமெரிக்கா 18 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் , இது ஒரு இடைக்கால சேவை என்றும் கூறினார். ஜெர்மனுக்கு விமானங்கள் இயக்குவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார். வெளிநாட்டு விமானம் சேவை தொடங்குவது குறித்து 3 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: