8 மருத்துவர்கள் இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூரில் அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரையும்

எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில்

பரபரப்பு ஏற்பட்டது. குன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து மருத்துவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 11 மருத்துவர்கள்

பணியில் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று

வருகிறார். இருவர் விடுமுறையில் உள்ளனர்.

இந்நிலையில் மீதமுள்ள 8 மருத்துவர்களையும் கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இடங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்து நேற்று இரவு மருத்துவ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை கண்டித்து குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் மருத்துவர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும்  மருத்துவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இல்லாவிட்டால் போராட்டம் மேலும் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவர்களின் போராட்டத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50க்கும் மேற்பட்ட நோயாளிகள், இதர நோயாளிகள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: