இறப்பு விகிதம் 2.57%: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டோம்...மத்தியமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி..!!!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றும் தணியாமல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 32,695 பேர் பாதித்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,68,876 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், மொத்த பலி எண்ணிக்கை, நேற்று உயிரிழந்த 606 பேருடன் சேர்த்து 24,915 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 6,12,814 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது, 331146 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ராஜ்குமாரி அமிர்த கவுர் OPD கட்டிடத்தை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் திறந்து வைத்தார். இந்த கட்டிடம் வயதானவர்களின் OPD சேவைகள் மற்றும் பிசியோதெரபிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி சவுபேயும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட தேசமாக இருந்தபோதிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாம் மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டோம் என்று தெரிவித்தார்.  இந்தியாவில் கொரோனாவால் இறப்பு விகிதம் 2.57% மற்றும் குணமடைந்தோர் விகிதம் 63.25% ஆக உள்ளது என்றார்.

Related Stories: