கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் மஷ்ராபி மோர்டசா

தாக்கா: கோவிட்-19 நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த வங்கதேச கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மஷ்ராபி மோர்டசாசாவுக்கு மீண்டும் நடந்த சோதனையில் ‘நெகட்டிவ்’ என வந்திருப்பதால் குணமடைந்திருப்பதாக அறிவித்துள்ளார். மோர்டசாவுக்கு தொற்று அறிகுறி தெரியவே, ஜூன் 20ம் தேதி சோதனை செய்துகொண்டார். சோதனையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சுய தனிமைப்படுத்தலில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இருவருக்கும் மீண்டும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.

அதில் மோர்டசாவுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்தது. அதனால் அவர் கொரோனாவில் இருந்து குணமானது உறுதி செய்யப்பட்டது. எனினும், அவரது மனைவி சுமோனா இன்னும் குணமாகவில்லை. ‘எனக்காக வேண்டிக்கொண்ட, ஆதரவாக இருந்து அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. மனைவிக்கு  இன்னும் ‘பாஸிட்டிவ்’ என்றே வந்துள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார். கொரோனா சிகிச்சை பெற்று வந்த வங்கதேச வீரர்கள் நஜ்முல் இஸ்லாம், நபீஸ் இக்பால்  ஆகியோரும் குணமடைந்திருந்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

Related Stories: