சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூலை 30ம் தேதி வரை நீட்டிப்பு; மின்வாரியம்

சென்னை: மின்கட்டணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் ஜூலை 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த வரும் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்  நீட்டிப்பு  செய்யப்பட்டது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.

இதனால்,  இந்த நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. எனவே மின் கட்டணம் செலுத்த மாற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது இந்த மாவட்டங்களுக்கு அதிக கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ம் வரை செலுத்தலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இரண்டு மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தாக்கத்தின் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

Related Stories: