கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பதிவு கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜ மற்றும் இந்து மக்கள் கட்சி- தமிழகம் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகாரில், கருப்பர் கூட்டம் என்ற பெயரில் யூ-டியூப் சேனலில் சரஸ்வதி தேவி குறித்து மிகவும் இழிவாக பதிவிட்டு அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் கடவுளான முருகக்கடவுள் குறித்தும், கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக பேசி அசிங்கப்படுத்திய சுரேந்திர நடராஜன், தயாரிப்பாளர் மற்றும் கேமரா மேன், எடிட்டர் மற்றும் நிர்வாகத்தினர் ஆகிய அனைவரும் சேர்ந்து இந்த செயலானது குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன் மூலம் அவர்களை தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து பேசிய சுரேந்திர நடராஜன் மற்றும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது. இரண்டு கட்சி அளித்த புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்து கடவுள்கள் மற்றும் கந்த சஷ்டி குறித்து அவதூறு பதிவு செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது ஐபிசி 153, 153(ஏ)(1), 295(பி),(505(1),(பி), 505(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: