சாத்தான் குளம் இரட்டைக்கொலை வழக்கில் கைதான 5 காவலர்களை 7 நாள் காவலில் எடுக்க சிபிஐ மனு தாக்கல்: நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!!!

மதுரை:  சாத்தான் குளம் இரட்டைக்கொலை வழக்கில் கைதான 5 காவலர்களை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.  சாத்தன் குளம் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தற்போது மதுரை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். சாத்தான் குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் ஒன்றாம் தேதி ஊரடங்கை மீறி செயல்பட்டதாக கூறி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், தந்தை-மகன் இருவரும் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொலை குறித்து தீவிர விசாரணை வேண்டும் எனவும் உடனடியாக குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும் எனவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மேலும், இந்த போராட்டமானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். அனால் உயர்நீதிமன்ற கிளை வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டனர்.இதனை தொடர்ந்து களத்தில் இறங்கிய சிபிசிஐடி போலீசார், முதற்கட்டமாக காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் கைது செய்தனர். பின்னர், சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக மேலும், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்டும் செய்யப்பட்டனர். இதனால் இதுவரை சாத்தான் குளம் கொலை வழக்கில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதினார். இதனால் வழக்கு வேகம் பிடித்தது. சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி சென்று       இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 2 நாட்களாக சாத்தான்குளம் சென்று, கொலை சம்பவம் நடத்த இடத்திலும், பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்ட மருத்துவமனையிலும் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், பென்னிக்ஸ் நடத்தி வந்த மொபைல் கடை மற்றும் அவரது பெற்றோர், உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சாத்தான் குளம் இரட்டைக்கொலை வழக்கில், முதலில் கைதான 5 காவலர்களை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகளின் தலைவர் ஏ.டி.எஸ்.பி விஜயகுமார் சுக்லா என்பவர் தலைமையில் மதுரை நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திக்கு வந்திருக்கின்றனர்.  இந்த வழக்கில் கைதான காவலர்களிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டும் என்பதற்காக சிபிஐ அதிகாரிகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சாத்தான் குளம் கொலை வழக்கில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களை நாளை காலை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார் .

Related Stories: