சின்னசேலம், உளுந்தூர்பேட்டையில் கொரோனா ஒழிப்பில் போலீசார் தீவிரம்

சின்னசேலம்: சின்னசேலம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் வடக்கநந்தல் பேரூராட்சியில் உள்ள அக்கராயபாளையம், கச்சிராயபாளையம், வடக்கநந்தல் பகுதியில் மட்டும்  14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பஸ்நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் விழிப்புணர்வு பேனர்களை வைத்துள்ளனர்.  

 அதில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் குறித்து படத்துடன் விளக்கியுள்ளனர். மேலும் சந்தேக நபர்கள் ஊருக்குள் நுழைந்தால்

காவல் துறை  கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போன் நம்பரை தெரிவித்துள்ளனர். மேலும் லட்சியம், காட்டனந்தல் உள்ளிட்ட கிராமபுறங்களில்  சப்- இன்ஸ்பெக்டர் பாலமுரளி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், முக கவசங்களையும் வழங்கினார்.

அதைப்போல வட்டார மருத்துவர் மதியழகன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்(பொ) மாயக்கண்ணன் முன்னிலையில் சின்னசேலத்தில் கடந்த 3 நாட்களாக கர்ப்பிணிகள் உட்பட 105 நபர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்து வருகின்றனர். கச்சிராயபாளையத்திலும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்து வருவதுடன் மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை: இதேபோல் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜிகுமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் பேருந்து நிலையம், கடைவீதி, உழவர் சந்தை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பேனர்கள் வைத்துள்ளனர்.

இந்த பேனர்களில் சின்னத்துணியால் முகத்தை மூட நீ மறுத்தால், ஒரு பெரிய துணியால் உன் உடலை மூட நேரிடும் என்ற வாசகம் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் எச்சரிக்கையாகவும் வைத்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர்.

Related Stories: