கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டியை தொடுவதற்கு தயக்கம்: சீர்காழி அருகே சுகாதார துறையினர் அச்சத்தால் அதிர்ச்சி

சீர்காழி: சீர்காழி அருகே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தனிமைப்படுத்த அழைத்து செல்ல வந்த சுகாதாரத்துறையினர், அவரை தொடுவதற்கு தயங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆரஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சயாவனம், சளி காய்ச்சல் மற்றும் இருமலுக்கு சிகிச்சை பெற சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்ததை அடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதனிடையே, மூதாட்டி மருத்துவமணையில் இருந்து வீடு திரும்பினார். அனால், சளி மாதிரி பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற சுகாதார துறையினர், தனிமைப்படுத்துவதற்காக மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அனல் அவர்கள் மூதாட்டியை தொட்டு தூக்க தயக்கம் காட்டினர். உறவினர்களை கொண்டு மூதாட்டியை ஆம்புலன்ஸில்  ஏற்றினர்.பாட்டுக்காப்பு உடையணிந்திருந்தும் ஊடேட்டியை தொட்டு தூக்க சுகாதார துறையினர் தயக்கம் காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: