சைக்கிளுக்கு மாறும் மக்கள்

திருவள்ளூர்: கொரோனா அச்சத்தால் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதிலும் மக்களுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு அனைவரும் தற்போது சைக்கிள் வாங்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில், கடந்த 2 மாதங்களாக சைக்கிள் விற்பனை சூடு பிடித்துள்ளது. அத்தியாவசியப் பொருள் போல் மக்கள் சைக்கிளை வாங்குகின்றனர். காரணம் மாவட்ட போலீசார் ஆங்காங்கே சோதனை என்ற பெயரில், பைக்குகளை பறிமுதல் செய்து காவல் நிலையங்களில் வைத்துள்ளனர். இந்த வாகனத்தை மீட்கும்போது குறிப்பிட்ட தொகையை தண்டம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் மக்கள் பலர் பைக்கினை வீட்டில் ஓரம் கட்டிவிட்டு சைக்கிளில் வலம் வர தங்களது சைக்கிளை சீரமைத்து பயன்படுத்தி வர ஆரம்பித்துள்ளனர்.

Related Stories: