சென்னை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

சென்னை: சென்னை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 6 காவலர்களும் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68254ஆக அதிகரித்துள்ளது. இதில் 42309 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இருப்பினும் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 24890 ஆக உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1054க்கும் மேலாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சென்னையில்தான் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும் தினந்தோறும் திணறி வருகின்றனர். இதனால் சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போது கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவலர்களுக்கும் கொரோனா அதிகளவு பரவி வருகிறது.

இதன் காரணமாக சென்னையில் பல காவல் நிலையங்கள் இதுவரை மூடப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா உறுதியான 6 காவலர்களும் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.  இதனைத்தொடர்ந்து, காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்ற காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

Related Stories: