தமிழக வாகனங்களுக்கு கர்நாடகத்தில் அனுமதி மறுப்பு!: விளக்கம் கேட்கும் பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி

பெங்களூரு: தமிழகத்தில் இருந்து செல்பவர்களை மாநில எல்லையில் கர்நாடக போலீசார் தடியடி நடத்தி விரட்டியடிப்பதால் பதற்றம் நிலவுகிறது. கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இருமாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இ - பாஸ் வைத்திருந்தாலும் கர்நாடகத்தில் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், விளக்கம் கேட்கும் பொதுமக்களை போலீஸ் தடியடி நடத்தி விரட்டியடிப்பதால் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.

போலீசாரின் அத்துமீறலால் நூற்றுக்கணக்கானோர் எல்லையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எல்லைப் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. முழு ஊரடங்கில் கடைகளும் அடைக்கப்பட்டிருப்பதால் உணவு, தண்ணீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்டால் போலீசார் சரிவர பதிலளிக்காமல் விரட்டி அடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இ - பாஸ் வைத்திருப்பவர்களை கூட எல்லையில் அனுமதிக்க மறுத்து கர்நாடக போலீஸ் விரட்டி அடித்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories: