வாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரி ஐகோர்ட்டில் மனு: கிருஷ்ணசாமி தாக்கல் செய்தார்

சென்னை: வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பண பலத்தை தடுக்க இரு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என்று தேர்தல் அறிவிப்பின்போது தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். இருந்தபோதும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. பல தொகுதிகளில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டும் 430 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.பணப்பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரியும்  அளித்த புகாரை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post வாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரி ஐகோர்ட்டில் மனு: கிருஷ்ணசாமி தாக்கல் செய்தார் appeared first on Dinakaran.

Related Stories: