சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்கு: நீதி நிலைநாட்டபட்டிருப்பதால் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!!

தூத்துக்குடி:  சாத்தான் குளம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு வியாபாரி ஜெயராஜ் கும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு காலத்தில் தங்களுடைய கடைகளை திறந்து வைத்திருந்ததாக கூறி, சாத்தான் குளம் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

பின்னர் இருவரும் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, தமிழத்தில் பல்வேறு எதிப்பு போராட்டங்கள் நடைபெற்றன. உறவினர்களும் நீதி கிடைக்கவேண்டுமென்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சாத்தான் குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து, மற்றொரு உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், காவலர்கள் முருகன், முத்து ராஜ் ஆகியோரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஜெயராஜ் குடும்பத்தினர் நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும், தங்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து மக்களுக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

போலீசாரின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, சாத்தான் குளம் அடுத்து நெடுங்குளம் கிராமத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பட்டாசுவெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கு கொலை வழக்காக மாறியதை தொடர்ந்து, அவர்கள் தங்களது மகிச்சியை பட்டாசு வெடித்து வெளிப்படுத்தியுள்ளனர்.

Related Stories: