நேரடி வழக்கு விசாரணை தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊரடங்கால் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் முறையிலேயே வழக்குகளை விசாரிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, ஜூலை 6ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்க  வேண்டும். வழக்கு விசாரணையின் போது மனுதாரர்களை நீதிமன்றத்திற்குள் அனுமதிக்க தேவையில்லை. சம்பந்தப்பட்ட வழக்குகளின் வக்கீல்கள் மட்டுமே ஆஜராக வேண்டும். கிரிமினல் வழக்குகள் பிரிக்கப்பட்டு கூடுதல் நீதிபதிகளுக்கு விசாரணைக்காக பட்டியலிட வேண்டும். வக்கீல்களின் விருப்பத்திற்கேற்ப காலை நேரத்தில் நேரடி விசாரணையும் மதியத்திற்கு பிறகு வீடியோ கான்பரன்சிங் முறையை மேற்கொள்ள வேண்டும். இந்த முறைகளை கடைபிடித்து வரும் 6ம் தேதி முதல் உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் நேரில் ஆஜராகி வாதிட வகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: