பெரியபாளையம் அருகே மனநல காப்பகத்தில் 11 பேருக்கு கொரோனா

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மனநல காப்பகத்தில் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மனநல காப்பகம் உள்ளது. இதில், 30க்கும் மேற்பட்டவர்கள் இங்கு தங்கியுள்ளனர். இந்நிலையில், இங்குள்ள சிலர் காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்தனர். இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இதையறிந்த, காப்பக நிர்வாகத்தினர் அனைவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில், காப்பக உரிமையாளர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது. இதையறிந்த, பெரியபாளையம் சுகாதார துறையினர் நேற்று மாலை மனநல காப்பகத்திற்கு கிருமி நாசினி தெளித்தனர். பின்னர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேரையும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். இதனால், ராள்ளபாடி கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories: