மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு அசுர வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. தானே, கல்யாண் - டோம்பிவிலி, புனே என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 493 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 626 பேரை கொரோனா தாக்கி உள்ளது. நேற்று 2 ஆயிரத்து 330 பேர் குணமடைந்து உள்ளனர். இதேபோல மகாராஷ்டிராவில் நேற்று மேலும் 156 பேர் கொரானாவுக்கு பலியாகினர்.