வியாபாரிகள் கொலைக்கு காரணமான அனைவர் மீதும் வழக்குபதிந்தால்தான் சிபிஐ விசாரணையில் நீதி கிடைக்கும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமி்ழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: எந்த குற்றத்தையும் செய்யாத வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலைக்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேர் மீதும்  கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கிய அரசு மருத்துவர் ஆகியோர் தங்களது பணியிலிருந்து கடமை தவறிய காரணத்தால் அவர்களையும் வழக்கில் சேர்க்கவேண்டும்.

உச்ச நீதிமன்றம் சிறைக்காவல் மரணங்கள் தொடர்பாக விதித்திருக்கும் நெறிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டிருக்கிற இவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்தால்தான் சி.பி.ஐ. விசாரணையில் நீதி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இல்லையென்று சொன்னால் கொலைக்கு காரணமான குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு தமிழக அரசு துணை போகிறது என்ற குற்றசாட்டை கூற விரும்புகிறேன். இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: