நீர்நிலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் செலவில் செய்யூர் குளம் சீரமைப்பு

மதுராந்தகம்: தமிழக அரசின் நீர்நிலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், ரூ.38 லட்சத்தில் செய்யூர் குளம் சீரமைக்கப்பட்டது. தமிழக அரசின் நீர்நிலைகள் மேம்பாடு திட்டங்களின் கீழ் செய்யூர் இருளர் காலனி பகுதியில் இருந்த பழமையான குளம் சுமார் ரூ.38 லட்சத்தில் ஆழப்படுத்தி சீரமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் இருந்த இக்குளத்தின் மொத்த பரப்பளவு 6.30 ஏக்கர். அதன் உள்பரப்பளவு 3 ஏக்கர். இவ்வளவு பெரிய குளம் தூர்ந்து போய் நீர் தேங்காத அளவுக்கு கிடந்தது.

இது தற்போது சீரமைக்கப்பட்ட குளத்தின் மேல் மட்டத்தை தொடும்போது 25 அடி உயரத்துக்கு காணப்படுகிறது. இதேபோன்று குளத்தின் சுற்றுக்கரையும் 60 அடி அகலத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் இறங்குவதற்கு வசதியாக 2 படித்துறைகளும், படித்துறையில் இருந்து குளத்தின் உள் பகுதிக்கு செல்ல 2 சிமென்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் மழை பெய்தால், இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பும்போது, சுற்றியுள்ள சுமார் 500 குடும்பங்களுக்கு வேண்டிய நீராதாரம் ஆண்டு முழுவதும் இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: