கர்பிணி பெண்களுக்காக கொரோனா பரிசோதனை அறை அமைப்பு; நெல்லை களக்காடு முன்னாள் மாணவர்கள் செயலால் பொதுமக்கள் நெகிழ்ச்சி..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 8 பேருக்கும், புறநகர் பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை நெல்லை மாவட்டத்தில் 710 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள வீட்டில் மூடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் பல்வேறு தன்னார்வல அமைப்புகள், மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் முன்னாள் மாணவர்கள் செய்த பெரும் உதவி பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நோய்களை தீர்ப்பதற்காக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருக்குறுங்குடி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்ட கொரானா மாதிரி பரிசோதனை அறை கர்பிணி பெண்களுக்கு உகந்தது போன்று அமைக்க அப்பகுதி முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர்.

இதன்படி, களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொருத்துவதற்கான முயற்சியில் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் (2000-2002 Batch) ஈடுபட்டு தங்களால் இயன்ற நிதியை ஒதுக்கி சுமார் 25,000 ரூபாய் மதிப்புள்ள புதிய கொரானா மாதிரி பரிசோதனை அறையை இன்று நிறுவியுள்ளார்கள். பல ஏழைகளுக்கும் குறிப்பாக கர்பிணி பெண்களுக்கும் பேருதவியாக இருக்கும் இந்த சேவையை முன்னின்று செய்த மாணவர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: