போதை பொருட்கள் விசாரணையில் அலட்சியம்: கடலூரில் எஸ்.ஐ. உட்பட 3 போலீசார் பணியிடைநீக்கம்..!!

கடலூர்: சிதம்பரம் அருகே கரையொதுங்கிய போதை பொருட்கள் குறித்த விசாரணையில் அலட்சியம் காட்டியதாக எஸ்.ஐ. உட்பட 3 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ளது புதுப்பேட்டை கடற்கரையோர மீனவ கிராமம். இங்கு கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி இந்த கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடற்கரையோரம் செல்லும்போது எட்டு போதைப்பொருள் பாக்கெட்டுகள் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கூறியுள்ளார்.

அதை கிராம நிர்வாகத்தின் மூலம் போதை பாக்கெட்டுகளை போலீசாரிடம் எடுத்து கொடுத்துள்ளனர். கடந்த 3 மாதமாக போதை பாக்கெட் சம்பந்தமான வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடற்கரையில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்ட 8 போதை மருந்து பொட்டலங்களை சரியான முறையில் சோதனை செய்யாமல் பரங்கிப்பேட்டை போலீசார் காவல்நிலைய அறையில் போட்டுள்ளனர்.

அண்மையில் மகாபலிபுரத்தில் போதை பொருட்கள் பொட்டலங்கள் கரையொதுங்கிய நிலையில், சந்தேகத்தின் பேரில் அதை பிரித்து பார்த்ததில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மெத்தாம்பிடமைன் என்ற போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், போதை பொருள் தொடர்பாக உரிய முறையில் விசாரணை செய்யவில்லை என கூறி பரங்கிப்பேட்டை எஸ்.ஐ. உள்ளிட்ட 3 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related Stories: