அமெரிக்காவில் திரும்பவும் வந்துடுச்சு!: ஒரேநாளில் 34 ஆயிரம் பேர் பாதிப்பு

ஹூஸ்டன்: உலகில் கொரோனாவால் மிகவும் அதிகளவாக, அமெரிக்காவில் 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். இதுவரை 1.20 லட்சம் பேர் இறந்துள்ளனர். இதனிடையே, வாஷிங்டன் பல்கலைக் கழகம் அக்டோபர் மாதம் அமெரிக்காவில் வைரசால் இறப்போரின் எண்ணிக்கை 1.80 லட்சமாக உயரும் என்று கணித்துள்ளது. இந்நிலையில்தான், அமெரிக்காவில் கொரோனா நேற்று மீண்டும் புத்துயிர் பெற்று எழுச்சி அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 34,700 பேர் பாதித்துள்ளனர். இதற்கு முன், கடந்த ஏப்ரல் மாதம் 36,400 பேர் பாதிக்கப்பட்டதே அதிகளவாக உள்ளது.

நியூயார்க், நியூ ஜெர்சி, அரிசோனா, கலிபோர்னியா, மிசிசிபி, நெவேடா, டெக்சஸ், ஆக்லஹாமா உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த வாரம் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், நேற்று கலிபோர்னியாவில் 7,100, புளோரிடாவில் 5,500, அரிசோனாவில் 1,200 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்தை விட 25% அதிகமாகும். இதனால், வைரஸ் தொற்று புதிதாக பாதித்துள்ள பகுதிகளில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து பிரிவுகளிலும் படுக்கைகள் நிரம்பி உள்ளன.

Related Stories: