பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதை ஏற்க முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

சென்னை: பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதை ஏற்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னா் டெல்லியில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், நகா்புறக் கூட்டுறவு வங்கிகள், பல மாநிலங்களில் கிளைகள் உள்ள கூட்டுறவு வங்கிகள் ஆகியவை இந்திய ரிசா்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்படுகிறது. வணிக வங்கிகளுக்குள்ள அனைத்து நடைமுறைகளும் இனி கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்.

கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளா்கள், டெபாசிட்தாரா்கள் பணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.  இதற்காக அரசு அவசரச் சட்டத்தையும் பிறபிக்கும் என தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இனிநிலையில் இவ்விவகாரம் குறித்து பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதை ஏற்க முடியாது. இது தவறான முன்னுதாரணம் ஆகும். ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் தான் கூட்டுறவு வங்கிகள் தமிழக்தில் இயங்கி வருகின்றன. அவசர சட்டம் வந்தால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஊழியர்களை தமிழக அரசு நியமிப்பதில் பாதிப்பு ஏற்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: