ராஜபாளையம் நகர் பகுதியில் வால்வுகள் சேதமடைந்து சாலையில் ஓடும் குடிநீர்

ராஜபாளையம்:  ராஜபாளையம் நகர் பகுதியில் தொடர்ந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணடிக்கப்படுகிறது. ராஜபாளையம் நகரில் 42 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் பத்து நாட்களுக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக பிரித்து நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் மழை இல்லாமலும், அதிகளவு காற்று வீசி வருவதால் குடிநீர் தேக்கத்தில் உள்ள தண்ணீர் காற்றோடு கலந்து வற்றும் சூழ்நிலையிலிருந்து வருகிறது. இந்நிலையில் நகர் பகுதியில் உள்ள அனைத்து குடிநீர் வால்வுகள் சேதமடைந்தும் பல லட்சம் குடிநீர் சாலையில் வீணாக ஓடுகிறது.

இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து ஒருசில பகுதிகளில் மட்டும் பழுதை நீக்கி பல இடங்களில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக வீணாகும் குடிநீரை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: