மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று கிராமம் தத்தெடுப்பு திட்டம் படுதோல்வி: பொது ஆய்வுக்குழு அறிக்கை

புதுடெல்லி: பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும், ‘மாதிரி கிராமம் திட்டம்’ தோல்வி அடைந்துள்ளதாக பொது ஆய்வு குழு தெரிவித்துள்ளது. மோடி முதல்முறையாக 2014ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு எம்பி.யும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் அடிப்படை வசதிகளை பெருக்கி, மாதிரி கிராமமாக மாற்ற உத்தரவிடப்பட்டது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் கபூர் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய பொது ஆய்வுக்குழுவை மத்திய அரசு நியமித்தது.

இது சமீபத்தில் தனது ஆய்வறிக்கை சமர்ப்பித்தது. அதில், `இத்திட்டத்திற்காக போதிய நிதி ஒதுக்க வேண்டும். இத்திட்டம் கிராங்களில் எதிர்பார்த்த வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஒரு சில கிராமங்களில் மட்டும் எம்பி.க்களின் முயற்சியால் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது. மற்றபடி, இத்திட்டம் குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: