அமெரிக்க அறிவியல் கழக இயக்குநராக தமிழர் தேர்வு

வாஷிங்டன்: அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநராக இந்திய அமெரிக்கரான தமிழகத்தை சேர்ந்த டாக்டர் சேதுராமன் பஞ்சநாதனை தேர்வு செய்ய செனட் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு மிகவும் புகழ் பெற்ற அமைப்பாக தேசிய அறிவியல் அறக்கட்டளை விளங்குகிறது.  இதன் இயக்குநராக இந்திய அமெரிக்க விஞ்ஞானி சேதுராமன் பஞ்சநாதனை (58) அதிபர் டிரம்ப் தேர்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க செனட் சபை சேதுராமனை இயக்குநராக நியமிக்க ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் கோர்டோவாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தேசிய அறிவியல் அறக்கட்டளையின் 15வது இயக்குநராக சேதுராமன் அடுத்த மாதம் 6ம் தேதி பதவியேற்க உள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் இயற்பியல் இளங்கலை பட்டம் பெற்று, சென்னை ஐஐடியில் எலக்ட்ரிகல் பொறியியல் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

Related Stories: