இரண்டரை மாத ஊரடங்கால் பாதிப்பு: விபத்து பட்டினி உள்ளிட்ட காரணத்தால் 878 பேர் பலி

*ஆய்வில் அதிர்ச்சி

புதுடெல்லி : நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக நீடித்த ஊரடங்கின்போது, பட்டினி, விபத்து, தற்கொலை உட்பட பல்வேறு காரணங்களால்  878 பேர் இறந்துள்ளனர்.நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதி வாரம் முதல் தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுப்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. எனினும், இதில் பல சவால்கள் எதிர்கொண்–்டு வருகிறது.

புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்வதில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். உணவு மற்றும் நிவாரணங்கள் இன்றி கடும் இன்னல்களை சந்தித்தனர். இந்நிலையில், கொரோனா நோய் தொற்று காரணமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தன்னார்வலர்கள் குழு ஆராய்ச்சி மேற்கொண்டது. கோவிட்- 19 நோய் தொற்று இன்றி, ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான உயிர் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விபத்துகள், பட்டினியே இறப்புக்களுக்கான பிரதான காரணமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றபோது ஏற்பட்ட விபத்துக்களில் 209 பேர் உயிரிழந்துள்ளனர்.

* பட்டினி மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 167 பேர் இறந்துள்ளனர்.

* 125 பேர் தற்கொலைகள் செய்துள்ளனர்.

* ஷ்ராமிக் சிறப்பு ரயில்களால் ஏற்பட்ட உயிரிழப்பு 95.

* மருத்துவ வசதிகள் பராமரிப்பு அல்லது கவனிப்பின்றி 63 பேர் உயிரிழந்துள்னர்.

* மதுபானங்கள் இல்லாதது தொடர்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 49.

* நடப்பது, வரிசையில் காத்திருந்ததால் உருவான சோர்வு காரணமாக 47 பேர் இறந்துள்ளனர்.

* தனிமைப்படுத்தும் முகாம்களில் ஏற்பட்ட இறப்புக்கள் 36.

* ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட குற்றச் சம்பவங்களால் 18 பேர் இறந்துள்ளனர்.

* போலீசார் தாக்கியது அல்லது மாநிலங்களின் வன்முறையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

* வகைப்படுத்த முடியாத மரணங்கள் 60 நிகழ்ந்துள்ளது.

Related Stories: