முற்றிலும் பெண்களால் இயங்கும் ஆடைத் தொழிற்சாலை: கோவை டெக்ஸ்டைல்ஸ் அதிபரின் முயற்சிக்கு பாராட்டு

கோவை: கோவையில் ஆடைத் தொழிற்சாலை ஒன்று முற்றிலும் பெண்களை கொண்டு இயங்கி வருகிறது. தோட்ட வேலை செய்வது முதல், கார் ஓட்டுவது வரை அனைத்து பணிகளும் பெண்களுக்கு மட்டுமே இது போன்ற பணிகளை திரைப்படங்களில் மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அந்த எண்ணத்தை இனி மாற்றிக்கொள்ள வேண்டும். கோவை மாவட்டத்தின் கவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பெண்கள் மட்டுமே பணி செய்கின்றனர். துணிகளை வெட்ட மட்டும் ஒரே ஒரு ஆண் பணிபுரிகிறார். மற்ற அனைவரும் பெண்களே.

ஊரடங்கு அறிவிக்க ஒரு மாதத்திற்கு முன்பு தான் தொழிற்சாலையையோ தொடங்கியிருக்கின்றனர். தொடக்கத்தில் சட்டைகள் தைத்து கொண்டிருந்த இவர்கள் காலத்தேவைக்கு ஏற்ப இப்போது முகக்கவசங்களுக்கு மாறியிருக்கின்றனர். 3 லேயருடன் பாதுகாப்பான முகக்கவசங்கள் இங்கு தயார் செய்யப்படுகிறது. தொழிற்சாலையில் பணிபுரியும் 40 பேரில் தையல் தொழில் தெரிந்தவர்கள் ஒருசிலர் மட்டுமே, மற்றவர்கள் இல்லத்தரிசிகளாக இருந்தவர்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வேலையும் கொடுத்திருக்கிறார் உரிமையாளர் கோகுல் ஆனந்த்.

4 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கார்ட்டூன் பொம்மைகளுடனும், 9 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பேட்மேன், ஸ்பைடர்மேன், படங்களுடனும் முகக்கவசங்கள் தயாரிக்கின்றனர். முகக்கவசம் தயாரிப்பதில் கையாளும் புதுமையை போலவே பெண்களை மட்டுமே வேலைக்கு வைத்த காரணத்தையு புதுமையாக ஆலோசித்து செய்திருக்கிறார் உரிமையாளர். பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் இந்த காலத்தில் குடும்ப நலனுக்கு மகளிருக்கு மட்டுமே வேலை கொடுத்திருக்கும் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரை பலர் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: