டெல்லி ரோகிணி நீதிமன்ற கட்டடத்தில் திடீர் தீ விபத்து..!: 9 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி!

டெல்லி: டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற கட்டடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. டெல்லி மாவட்ட நீதிமன்றத்தின் 3வது தளத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக அருகில் உள்ள மக்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து, 9க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது தீயணைப்பு துறையினருக்கு பெரும் சவாலாகவே இருந்தது. தொடர்ந்து, சுமார் ஏறத்தாழ இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக போராடிய தீயணைப்பு துறையினர் ஒருவழியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

குறிப்பாக இந்த தீவிபத்தில் 3வது மாடியில் இருந்த நீதிமன்ற கோப்புகள் மற்றும் பல்வேறு விதமான ஆவணங்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகி இருப்பதாக தற்போது தகவல்கள் தெரிவித்த வண்ணம் இருக்கிறது. தொடர்ந்து கொரோனா அச்சம் காரணமாக நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் காணொளி காட்சி மூலமாக நடைபெற்று கொண்டிருப்பதால் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தீ விபத்து காரணமாக ஆவணங்கள் முழுமையாக எரிக்கப்பட்டுள்ளதால் தீ விபத்திற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: