நெதர்லாந்திலிருந்து போதை மாத்திரைகள் கடத்தல்: ஆந்திர கல்லூரி மாணவர் கைது: இணையதளம் மூலம் ஆர்டர்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானத்தின் பார்சல்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர்.  அப்போது, நெதர்லாந்து நாட்டிலிருந்து ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு முகவரிக்கு பார்சல் வந்திருந்தது. அதில் விளையாட்டு பொம்மைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சுங்க அதிகாரிகளுக்கு அந்த பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது.  பார்சலை பிரித்துப்பார்த்ததில் மெத்தோ பெட்டமின் என்ற ஒருவகை போதை மாத்திரைகள் இருந்தன. அதன் எடை 450 கிராம். பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் 400 மாத்திரைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு 12 லட்சம்.

இதையடுத்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பார்சலில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் ஊர் முகவரி இருந்தது. அந்த போதை மாத்திரைகள் இணையதளம் மூலம் பதிவு செய்தது தெரியவந்தது. ஆந்திரா முகவரியில் போதை மருந்து வரவழைத்த 27 வயது இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தான் போதை மாத்திரைகளை வரவழைத்துள்ளார் என்று தெரியவந்தது.  இதையடுத்து சுங்கத்துறையினர் அவரை கைது செய்து சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: