ஊரடங்கு நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்த 3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்: பார் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, மறைமலைநகரில் பதுக்கி வைத்திருந்த 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனா். செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தேவகோட்டையை சேர்ந்த இளையராஜா என்பவர் பார் நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், பல விதிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இந்த வேளையில், மறைமலைநகரில் உள்ள ஒரு குடோனில் பீர் உள்பட மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக செங்கல்பட்டு  மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இஸ்பெக்டர் ராஜேஸ்வரி தேவி தலைமையில், போலீசார் அங்கு சென்று, அங்குள்ள குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு குடோனில், 45 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அதன் மதிப்பு சுமார் 3 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அங்கு விற்பனை செய்து வந்த தேவகோட்டையை சேர்ந்த பார் உரிமையாளர் இளையராஜா, மதுரையை சேர்ந்த கார்த்திக், ராஜா, சரவணன், சதாசிவம் ஆகியோரை கைதுசெய்தனர்.

பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நாளை  முதல் வரும் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு தொடர்வதால், கள்ளச்சந்தையில் அதிக விலையில் மதுபானம் விற்க, இப்போதே மதுபாட்டில்களை பதுங்கி வைத்ததாக கைதானவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: