எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் இந்தியாவுக்கு சீனா அழைப்பு

பெய்ஜிங் : லடாக் எல்லையில் இந்தியா-சீனா  படைகள் இடையே நடைபெற்ற சண்டையில் இந்தியா தரப்பில் 25 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சீன நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என  இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இனி எந்த ஒரு மோதலையும் சீனா விரும்பவில்லை என்றும் தூதரக ரீதியிலும் ராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். நடந்த சம்பவங்களில்  எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: