3ம் கட்டமாக கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி: வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நோய் எதிர்ப்பு திறன்?

சென்னை: நாடு முழுவதும் 3ம் கட்ட கோவாக்சின் பூஸ்டர் ஊசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் 7 பேருக்கு பூஸ்டர் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு திறன் நீடிக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள் கிழமை 7 பேருக்கு கோவாக்சின் 3வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை தடுப்பூசி போட்டபின் ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது பூஸ்டர் ஊசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் புது டெல்லி, ஐதராபாத், பாட்னா என நாடு முழுவதும் 190 பேருக்கு 3ம் கட்ட பூஸ்டர் ஊசிகள் போடப்பட உள்ளன. சென்னையில் 20 முதல் 25 பேருக்கு தனியார் மருத்துவமனையில் போடப்பட உள்ளது.3வது பூஸ்டர் ஊசிகளை போட்டுக்கொண்ட நபர்கள், அடுத்த 6 மாதங்கள் கண்காணிப்படுவார்கள் என்றும் மேலும் அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு திறன் தொடர்ந்து கண்காணிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியானது வாழ்நாள் முழுமைக்கும்  நீடிக்கும் தன்மை கொண்டதாக மாறி விடும் வாய்புள்ளதா என்று ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வில் நல்ல பலன்கள் கிடைக்கும் நிலையில் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டு கொண்டவர்களுக்கு 4 முதல் 6 மாத இடைவெளியில் வாழ்நாள் முழுமைக்கும் நோய் எதிர்ப்பு திறனை வழங்கும் 3ம் கட்ட பூஸ்டர் ஊசிகள் போடப்படும் என கூறப்படுகிறது. …

The post 3ம் கட்டமாக கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி: வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நோய் எதிர்ப்பு திறன்? appeared first on Dinakaran.

Related Stories: