இந்தியா-சீனா எல்லையில் மீண்டும் போர் பதற்றம்; கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல்...3 இந்திய வீரர்கள் வீரமரணம்...!

லடாக்: கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு நாடுகளும் அங்கு படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதன்படி, இருநாடுகளுக்கு இடையே தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடந்தது. இதில், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதியான முறையில் பிரச்னைகளை பேசித் தீர்க்க முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அமைதிக்கான முதல் படியாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் அமைதி கொண்டதால், சீன படைகள் எல்லையில் திரும்ப தொடங்கின.

இந்நிலையில், எல்லையில் இந்தியா-சீனா இடையேயான மோதலில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை திரும்பப் பெறும்போது இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த 3 பேரில் ஒருவர் அதிகாரி என்றும் 2 பேர் இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. எல்லைப் பிரச்சனையில் தீர்வு காணப்பட்ட நிலையில், சீன ராணுவத்தினால், இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் போர் பதற்றம் நிலவுகிறது.

Related Stories: