சென்னைவாசிகள் வருகை அதிகரிப்பு: டாஸ்மாக் திடீர் மூடல்

புழல்: சென்னைவாசிகள் வருகை அதிகரித்ததால் கொரோனா பரவலை தடுக்க சோழவரம் அருகே உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டது. இதனால் குடிமகன்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.   சோழவரம் அடுத்த பெருங்காவூர் செல்லும் சாலை மற்றும் ஞாயிறு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் 2 டாஸ்மாக் கடைகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதில், சோழவரம், அருமந்தை, ஞாயிறு, பெருங்காவூர், விச்சூர், செங்குன்றம் மற்றும் சென்னையின் புறநகர் பகுதியில் இருந்து பல்வேறு குடிமகன்கள் அதிக அளவில் வந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில், சென்னை வாசிகள் அதிக அளவில் வந்து மதுபாட்டில்கள் வாங்கி செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதனையடுத்து, மேற்கண்ட 2 கடைகளும் நேற்று திடீரென மூடப்பட்டது. இதனால் குடிமகன்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  சென்னையில் கொரோனா அதிகம் பரவுவதால் அங்கிருந்து வருபவர்கள் மூலம் இந்த பகுதியில் இருப்பவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனால் தான் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.

Related Stories: